தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 ஆயிரத்து 940 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 82 ஆயிரத்து 295 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து மாநில சுகாதாரத்துறை இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வெளியிட்டுள்ள அறிவிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மாநிலத்தில் இன்று மட்டும் வைரஸ் தொற்றுக்கு இலக்காகி 54 பேர் மரணித்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்புக்கள் ஆயிரத்து 79 ஆகப் பதிவாகியுள்ளது.
மேலும், வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து இன்று ஆயிரத்து 443 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை மொத்தமாக 45 ஆயிரத்து 537 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
இதேவேளை, இன்றுமட்டும் தமிழகத்தில் 32 ஆயிரத்து 948 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை மொத்தம் 11 இலட்சத்து 10 ஆயிரத்து 402 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
அதேபோல், மாநிலம் முழுவதும் ஒரேநாளில் 31 ஆயிரத்து 505 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதுவரை 10 இலட்சத்து 56 ஆயிரத்து 564 பேருக்கு கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

