இந்திரஜித் குமாரசுவாமி நியமனம் – மஹிந்த தரப்பு வரவேற்பு

399 0

dineshwithmahinda-484மத்திய வங்கியின் ஆளுநராக இந்திரஜித் குமாரசுவாமி நியமிக்கப்பட்டமையை மஹிந்த தரப்பு நாடாளுமன்ற குழு வரவேற்றுள்ளது.
அந்தக்குழுவின் நாடாளுமன்ற குழு தலைவர் தினேஸ் குணவர்த்தன இந்த வரவேற்பை வெளியிட்டுள்ளார்.
இந்திரஜித்தின் அனுபவம் மற்றும் பொருளாதாரத்துறையில் அவரின் ஈடுபாடு என்பவற்றை கருத்திற்கொண்டு இந்த நியமனத்தை வரவேற்பதாக தினேஸ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்
டுவிட்டர் பதிவு ஒன்றில் அவர் தமது கருத்தை வெளியிட்டுள்ளார்
அந்தவகையில் இந்திரஜித் குமாரசுவாமியின் நியமனத்தை வரவேற்ற முதல் எதிர்க்கட்சி அரசியல்வாதி தினேஸ் குணவர்த்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment