மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவு – இணக்கமுள்ள தெரிவு

4786 0

CmHPCeGWQAEhiB0மத்திய வங்கியின் புதிய ஆளுநராக இந்திரஜித் குமாரசுவாமியின் தெரிவானது ஒரு இணக்கமுள்ள தெரிவு என்று இந்திய நாளிதழ் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான முரண்பட்ட கருத்துக்களின் பின்னர் இந்த தெரிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவேதான் இந்த தெரிவு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் கலந்தாலோசித்து எடுக்கப்பட்ட முடிவு என்று ஜனாதிபதி தமது டுவிட்டரில் தெரிவித்துள்ளதாக இந்திய செய்தித்தாள் சுட்டிக்காட்டியுள்ளது.
முன்னாள் ஆளுநர் அர்ஜூன மஹேந்திரன் கடந்த 30ஆம் திகதியுடன் பதவிவிலகிய நிலையில் ஜனாதிபதியை பொறுத்தவரையில், அரசியலற்ற சுயாதீனமான ஒருவர் அல்லது மத்திய வங்கியில் கடமையாற்றிய ஒருவர் இந்த பதவிக்கு நியமிக்கப்படவேண்டும் என்ற நோக்கத்துடன் இருந்தார்.
பிரதமரை பொறுத்தவரையில் ஆளுநர் ஒருவர், அரசாங்கத்தின் பொருளாதார திட்டங்களை முன்னெடுத்துச்செல்லக்கூடிய அதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணங்கி செல்லக்கூடியவதாக இருக்கவேண்டும் என கருதினார்.
முன்னதாக நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் ச்சரித்த ரத்வத்தை இந்த பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டபோது, அரசியல் பின்னணி என்ற காரணத்தினால் அதனை ஜனாதிபதி விரும்பவில்லை.
இந்தநிலையிலேயே இந்திரஜித் குமாரசுவாமியின் தெரிவு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்திரஜித் குமாரசுவாமி 1950ஆம் ஆண்டு தமிழ் குடும்பத்தில் பிறந்தவராவார்.
அவருடைய தந்தையுடைய தந்தையான சி. குமாரசுவாமி இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராக கடமையாற்றினார்.
அவருடைய தந்தையாரான ராஜூ குமாரசுவாமி ரோவிங் ராஜூ என்ற அழைக்கப்பட்ட குடியியல் பணியாளராகவும் ராஜதந்திரியாகவும் செயற்பட்டவராவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment