விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தகர் கஞ்சிபானி இம்ரானின் தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களில் ஒருவர் எதிர்வரும் ஜூலை மாதம் 2 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட ஏனைய மூன்று சந்தேகநபர்களையும் 24 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

