கண்டியில் துப்பாக்கிச்சூடு காணொளி வெளியனது (காணொளி)

296 0

 

vbbகண்டி – அங்கும்புர பெப்பிலகொல்ல பகுதியில் நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் 6 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் தலைமையில் இந்த விசாரணைகள் நடாத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டி – அங்கும்புர பகுதியில் நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த துப்பாக்கி பிரயோகம் இன்று காலை 8.40 அளவில் நடாத்தப்பட்டுள்ளது.23 வயதான ஒருவரே இந்த துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த சந்தேகநபர் துப்பாக்கி பிரயோகத்தை நடாத்தி விட்டு தப்பிச் சென்று கபல்கஸ்தென்ன பகுதியில் காரிலிருந்து  இறங்கிய நிலையில், பிரதேசவாசிகளினால் அவர் பிடிக்கப்பட்டுள்ளார்.இவ்வாறு பிடிக்கப்பட்ட நபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ரி56 ரக துப்பாக்கியொன்றும், 20 துப்பாக்கி ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.கண்டி – அங்கும்புர பெபிலகொல்ல முஸ்லிம் பள்ளிவாசலுக்கு அருகில் கார் ஒன்றில் வருகைத் தந்த சிலர் வீதியோரத்தில் நின்றுக் கொண்டிருந்த இருவர் மீது துப்பாக்கி பிரயோகம் நடாத்தியுள்ளனர்.இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்து கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்;.

இதேவேளை, சந்தேகநபர்கள் பயணித்த கார் பூஜாபிட்டி பகுதியில் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த சம்பவத்துடன் மேலும் இருவர் தொடர்புப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.சந்தேகநபர்களை கைது செய்வதற்காக விசாரணைகள் மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மாஅதிபர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர் முஸ்லிம் என்பதுடன், துப்பாக்கி பிரயோகத்தை நடாத்தியவரும் முஸ்லிம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது.

அத்துடன், இந்த குற்றச் செயலுக்காக வருகைத் தந்தவர்களும் முஸ்லிம் இனத்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.தனிப்பட்ட பிரச்சினையை ஒன்றை அடிப்படையாகக் கொண்டே இந்த துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.