கண்ணகியாள் அறியாளோ.- வன்னியூர் குரூஸ்-

532 0

கண்ணகியாள் அறியாளோ.
***** *****
கோவலன் நிலையறிந்து நீதி கேட்டெழுந்து…
மாநகர் மதுரைதனை எரித்த கண்ணகியோ
காந்தலதைத் தணித்த நந்திக் கரையதிலே…
நேர்ந்த நீதியற்ற நேற்றைய நிலையிதோ!

பேரழிவு தனிலிந்து தமைக்காத்து வந்தவரை
புலியென்று தரம்பிரித்து நெடுநிரையில் வைத்திருக்க…
கொடுமைகள் செய்யுமந்தக் கொடியோர்கள் கையதிலே
கொடுத்தும் விடுத்தும் பிரிந்தவரோ பலரங்கே!

முன்னே செல்வோரைக் கொல்லும் முறையுணரக்
கண்ணைக் கட்டிவிட ஏவும் சொல்கேட்டு…
காவல் சூழ்ந்திருக்க ஏதும் வழியின்றிச்
சாவு தனையறிந்தும் சென்றனரே சோதரர்கள்.
– வன்னியூர் குரூஸ்-