கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி இடைநிறுத்தப்பட்டதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்கக்கூடாது-சீனா

295 0

yi-xianliang-2கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி இடைநிறுத்தப்பட்டதுபோன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களில் இடம்பெறாதிருப்பதை சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உறுதிப்படுத்தவேண்டுமென சீனத் தூதுவர் யி ஷியாங்லியாங் வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில் தான் சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரைச் சந்தித்தபோது இதுபற்றி வலியுறுத்தியிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் கொழும்பில் நடந்த முதலீடு மற்றும் வர்த்தகத்துக்கான சீன- சிறிலங்கா வர்த்தக கூட்டத்தில், உரையாற்றிய போதே, சீனத் தூதுவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டதால் இரண்டு நாடுகளுக்கும் இழப்பு ஏற்பட்டது. இது போல மீண்டும் இடம்பெறக் கூடாது.

சட்டரீதியான உடன்பாடுகளின் மூலம் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.ஆட்சி மாற்றம் ஏற்படும் போது பொருளாதார உடன்பாடுகள் குறித்த கொள்கைகளில் மாற்றம் ஏற்படக் கூடாது என்றும் சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.