வரவு செலவுத் திட்டம் 107 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

287 0

41860283bbb22017ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் 107 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாலை 5.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட வரவு – செலவுத்திட்ட வாக்கெடுப்பில், ஆதரவாக 162 பேரும் எதிராக 55பேரும் வாக்களித்திருந்தனர். அதனடிப்படையில், வரவு – செலவுத் திட்டம் 107 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இந்த வாக்களிப்பிற்கு 7பேர் பிரசன்னமாகவில்லை. இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது ஆதரவை வழங்கியிருந்ததோடு, ஜேவிபி எதிராக வாக்களித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.