வடக்கு, கிழக்கு முன்னாள் ஆளுநர்களால் எழுதப்பட்ட நூலை வெளியிட்டு வைத்தார் மகிந்த!

261 0

conflict-stability-2வடக்குக், கிழக்கு மாகாணங்களுக்கான ஆளுநர்களாக இருந்த முன்னாள் படை அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, மற்றும் றியர் அட்மிரல் மொகான் விஜேவிக்கிரம ஆகியோர் இணைந்து எழுதிய நூலை சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ வெளியிட்டு வைத்துள்ளார்.

வடக்கு ஆளுநராக இருந்த மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியும், கிழக்கின் ஆளுநராக இருந்த றியர் அட்மிரல் மொகான் விஜேவிக்கிரமவும் இணைந்து எழுதிய ‘குழப்ப நிலை மற்றும் உறுதி நிலை – வடக்குக் கிழக்கின் போருக்குப் பிந்திய அபிவிருத்தியும் நல்லிணக்கமும் என்ற நூலின் வெளியீட்டு விழா நேற்று மாலை ஹெக்டர் கொப்பேகடுவ ஆராய்ச்சி நிலையத்தில் இடம்பெற்றது.

போருக்குப் பின்னர் வடக்குக், கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக, அந்தக் காலகட்டத்தில் வடக்கின் ஆளுநராக இருந்த ஜி.ஏ.சந்திரசிறி, கிழக்கின் ஆளுநராக இருந்த றியர் அட்மிரல் மொகான் விஜேவிக்கிரம ஆகியோர் இணைந்து இந்த நூலை எழுதியிருந்தனர்.

இந்த நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ,விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தபின்னர், வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடாத்தி அங்குள்ள மக்களுக்கு ஜனநாயக உரிமையைப் பெற்றுக்கொடுக்க மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை.

வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்குத் தயாரானபோது, அங்கு தேர்தல் நடாத்தினால் தோல்வியடையலாம் என டக்ளஸ் தேவானந்தா கூறியிருந்தார்.அதேபோல், அந்த தேர்தலினால் தமிழ் தேசிய கூட்டமைப்பு பலம்பெறும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் என்னிடம் கூறினார்.