மத்திய வங்கியை தனியார் மாயமாக்க முயற்சி – கூட்டு எதிர்கட்சி குற்றச்சாட்டு

244 0

bandulla_guna-e13562006329691இந்த முறை பாதீட்டின் ஊடாக, மத்திய வங்கியின் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்படும் செலவீனம் மற்றும் வருமானம் ஈட்டல், மூன்று தனியார் நிறுவனங்கள் இணைந்த ஒரு நிறுவனத்திடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதன்படி வரலாற்றில் முதல் தடவையாக மத்திய வங்கி தனியார் மயப்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

அதேபோல தனி ஒருவர் வருடாந்தம் செலுத்த வேண்டிய வரி பணமானது 36 ஆயிரத்து 714 ரூபாவால் அதிகரித்திருப்பதாகவும் பந்துல குணவர்த்தன சுட்டிக்காட்டினார்.