மட்டக்களப்பு மாவட்டத்தின் 6 பிரதேச செயலாளர் பிரிவுகளில் அடுத்தாண்டு 1000 வீடுகள் அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, ஏறாவூர்ப்பற்று, வவுணதீவு, கிரான், பட்டிப்பளை ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் தலா 150 வீடுகள் என்ற அடிப்படையில் 600 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 300 வீடுகளும் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் 100 வீடுகளும் அமைக்கப்படவுள்ளன.
மீள் குடியேற்ற அமைச்சின் உதவியுடன் இந்த வீடுகள் அடுத்த வருடம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

