நாடளாவிய ரீதியில் மக்களுக்கு நிவாரண நடவடிக்கை!

276 0

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிப்பதால் நெருக்கடிக்குள்ளாகியுள்ள பொது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் நாடு தழுவிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாத மக்கள் ஜனாதிபதி செயலணியில் முறைப்பாடு செய்ய முடியும் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணி அலரிமாளிகையில் அமைக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் தற்போது நாடுதழுவிய ரீதியில் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் பல பிரதேசங்களில் உள்ள மக்கள் தமக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்கப்பெறாமையினால் விசனம் தெரிவித்துள்ளார்கள்.

அரசாங்கத்தின் செயற்திட்டங்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நிவாரணம் கிடைக்கப் பெறாதவர்கள் அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் உத்தியோகபூர்வ தொலைபேசி ஊடாக முறைப்பாடு செய்வதற்கான வழிமுறை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஏனைய நாடுகளை காட்டிலும் பல முன்னேற்றகரமான நடவடிக்கைகளை ஆரம்பத்தில் இருந்து எடுத்துள்ளோம்.

தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த கிராமிய உற்பத்திகளை ஊக்கப்படுத்த தீர்மானித்துள்ளோம் என்றார்.