கொராேனா வைரஸினால் உயிரிழந்த இலங்கையரின் இறுதி கிரியை சுவிஸில் இடம்பெறும் – அமைச்சு

288 0

சுவிட்சர்லாந்தில் கொராேனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய இலங்கையை சேர்ந்த நபரின் இறுதிக் கிரியைகள் அந்நாட்டிலேயே இடம்பெறுமென வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த 59 வயதுடைய குறித்த நபர் கடந்த 25ஆம் திகதி கொரோன தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்த இவரது இறுதிக் கிரியைகள் அந்நாட்டிலேயே இடம்பெறுமெனவும், அது தொடர்பாக சுவிட்சர்லாந்திலுள்ள இலங்கைத் தூதரகத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படுமெனவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.