புதிதாக 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்களை நியமிக்க முதல்வர் உத்தரவு

24 0

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 530 மருத்துவர்கள், 1,000 செவிலியர்களை நியமனம் செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து இன்று சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 530 மருத்துவர்கள், 1,000 செவிலியர்கள், 1,508 ஆய்வக டெக்னீசியன்களை நியமனம் செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக காலியிடங்களை நிரப்பவும், மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்படும் நபர்கள் 3 நாளில் பணியில் சேரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிதாக 200 ஆம்புலன்ஸ்களை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.