பிரான்ஸில் கொரோனாத் தொற்று! யாழ்.இளைஞன் மரணம்!!

38 0

பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்றினால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியைச் சேர்ந்த கீர்த்தி என்று அழைக்கப்படும் குணரட்ணம் கீர்த்திபன் (வயது-32) என்ற கொக்குவில் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

குறித்த இளைஞனின் உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு காவல்துறையினர் மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பிரான்ஸில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றினால் பல தமிழர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.