தற்காலிகமாக மூடப்படுகிறது திருநெல்வேலிச் சந்தை! மாற்று இடங்களும் அறிவிப்பு!!

27 0

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட திருநெல்வேலிச் சந்தை ஊடரங்கு தளர்த்தப்படும் போது இடமாற்றம் செய்யப்படவுள்ளது.

அந்தவகையில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது திருநெல்வேலிச் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுப் பின்வரும் இடங்களில் வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் தெ.கிரிதரன் அறிவித்துள்ளார்.

அந்தவகையில்,

  1. கலாசாலை வீதியில்
  2. அரசடி அம்மன் ஆலயம் முதல் முத்துத்தம்பி மகா வித்தியாலயம் வரையான பகுதியில் வீதியின் ஒரு பக்கத்திலும்
  3. திருநெல்வேலி விவசாயப் பண்ணைப் பகுதியிலும்
  4. ஆடியபாதம் வீதியில் இராமசாமி வைத்தியசாலை பகுதியிலும்
  5. பலாலி வீதியில் தினேஷ் பேக்கரி மற்றும் பலாலி வீதியின் ஒரு பக்கத்திலும்
  6. ஆடியபாதம் வீதியில் கொக்குவில் பொது நூலகப் பகுதியிலும் கிராமப் புறங்களில் பொது அமைப்புக்களின் முன்றலிலும் மேற்கொள்ளப்படும்.

 

இதேவேளை கொரோனாவிலிருந்து எமது சமூகத்தை பாதுகாக்க நல்லூா் பிரதேசசபை மேற்கொள்ளும் இப் பாதுகாப்பு நடவடிக்கைக்கு வர்த்தகர்கள், பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு உறுப்பினா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

யாழ்ப்பணத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது திருநெல்வேலி சந்தையில் மக்கள் நெருக்கடியை தவிர்க்கும் முகமாகவே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.