மீண்டும் ஒரு எழுக தமிழ் நடக்ககூடாது என்பதில் தமிழ்மக்கள் பேரவையில்கூட அழுத்தங்கள்

269 0

k640_k3தமிழ் மக்களின் பேரெழுச்சியுடன் கடந்த செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற எழுக தமிழ் பேரணியினை தொடர்ச்சியாக மட்டகளப்பு மற்றும் வவுனியாவினில் நடத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தடுத்து நிறுத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.

எனினும் ஜனநாயக ரீதியாக தமது தரப்பு நியாயத்தை கூறி மக்கள் அணி திரள தயாரகவுள்ளனரோ அங்கே அரசியல் ரீதியாக அழுத்தத்தை பிரயோகிக்க முடியும் என்ற நிலைப்பாட்டை பேரவையின் முக்கிய தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பின்னர் மிகவும் மோசமாக தமிழ் மக்கள் ஏமாற்றப்படுவதாக தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், உரிமை போராட்டத்திற்கு துரோகமிழைப்பவர்களை தடுக்க வேண்டும் என்ற உணர்வோடுதான் தமிழ் மக்கள் பேரவை முன்னெடுத்த எழுக தமிழ் பேரணிக்கு மிகப்பெரியளவில் கலந்து கொண்ட மக்கள் கூட்டம் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையினில் மீண்டும் ஒரு எழுக தமிழ் நடக்ககூடாது என்பதில் திட்டமிட்ட ரீதியில் பல தரப்புக்கள் செயற்பட்டு வருவதுடன், இந்தக் கருத்துக்களால் தமிழ்மக்கள் பேரவையில்கூட அழுத்தங்கள் உருவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாண வெற்றியை அடுத்து மட்டக்களப்பிலும் தொடர்ந்து வவுனியாவிலும் பெருமெடுப்பினில் எழுக தமிழை முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்