இலங்கையில் முதலாவதாக இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர் குணமடைந்துள்ளார் என ஐ.டி.எச். வைத்தியசாலை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
வெளிநாட்டு பயணிகளுக்கான வழிகாட்டுநராகச் செயற்பட்ட இவர், முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக்த தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் இன்று (திங்கட்கிழமை) கொழும்பு அங்கொடையில் அமைந்துள்ள ஐ.டி.எச். வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
52 வயதான குறித்த சுற்றுலா வழிகாட்டி இத்தாலிய சுற்றுப்பயணக் குழுவுக்கு சேவைகளை வழங்கிய பின்னர் நாடு திரும்பிய நிலையில் இந்த மாத தொடக்கத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

