கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இயக்கச்சி பகுதியில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளின் இலக்கத்தகட்டினை மறைத்து பயணித்த இருவரை பளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த போவதாக பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் சைக்கிளில் ஒன்றினையும் கைப்பற்றி உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.ஊரடங்கு நேரத்தில் மக்கள் வெளியில் வருவதை தவிர்க்குமாறும் சட்டத்தை மீறி வந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் கூறினார்.

