கொரோனா வைரஸ் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி

302 0

 கொரோனா வைரஸ் தொற்று நோயனது ;அவசர தனிமைப்படுத்தலுக்குள்ளாக வேண்டிய தொற்று நோய் ; என பிரகனடப்படுத்தப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டள்ளது.

அரசியலமைப்பின் அவசர தொற்று நோயிலிருந்து தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பான பிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைவாக அச்சிடப்பட்டுள்ள இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் 1925ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 மற்றும் 1960ஆம் ஆண்டு மே ஆறாம் திகதி அவசர நிலைமைகளில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களினது விசேட அம்சங்கள் சிலவும் உள்வாங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைவாக கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து நபர்களை பாதுகாப்பதற்காக அவசர தனிமைப்படுத்தலுக்குள்ளாக்க வேண்டிய தொற்றுநோயாக பிரகடணப்படுத்துவதாக குறிப்பிட்டு சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி கையொப்பமிட்டுள்ளார்