யாழ்ப்பாணத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது!

425 0

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதனை யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி உறுதிப்படுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மொத்தமாக 17 பேர் கொரோனா அச்சம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சைப் பிரிவில் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

இவர்களில் 3 பேருக்கு தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். இந்நிலையில் ஏனையோர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர் அரியாலையில் தேவாலயத்தில் இடம்பெற்ற ஆராதனை நிகழ்வில் கலந்துகொண்டவர் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இன்னும் இது உறுதிப்படுத்தப்படவில்லை.