நுவரெலியா மாவட்டம் பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய இரண்டு பேரும் தம்வசம் கஞ்சா வைத்திருந்த இரண்டு பேர் உள்ளடங்கலாக நான்கு பேரை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (21) மாலை வேலையில் இடம்பெற்றதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
பொகவந்தலாவ பகுதியில் உள்ள இரண்டு பேர் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டிலும் கஞ்சா போதை பொருள் வைத்திருந்த பொகவந்தலாவ பெற்றோசோ பகுதியை சேர்ந்த ஒருவரும் மற்றுட் பெல்மடுல்ல பகுதியை சேர்ந்த நபர் உள்ளடங்கலாக மொத்தம் நான்கு பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொரோனா நோயினை கட்டுபடுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்ட ஊர்டங்கு சட்டத்தினை மீறிய குற்றச்சாட்டு மற்றும் ஒரு தொகை போதை பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் பெயரில் இவர்கள் கைது செய்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நான்கு பேரும் ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலை படுத்துவதற்கான நடவடிக்கையினை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

