ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் வேளையில், அசௌகரியங்களுக்கு உள்ளாகும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கென நிர்வாக சேவைகள் சங்கம் நிதியம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.
பிரதேச செயலாளர் பிரிவுகளின் ஊடாக உலர் உணவுப் பொருட்களை பகிர்ந்தளிப்பதற்கான வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில் இது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் பிரபாத் சந்தரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
10 இலட்சம் ரூபா முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நிதியத்தில், பொதுமக்கள் நிதியுதவி வழங்க முடியும். இலங்கை வங்கியின் கொழும்பு கோட்டை கிளையின் 840 259 56 என்ற கணக்கு இலக்கத்திற்கு தங்களின் நிதியுதவியை வைப்பிலிட முடியும் என தலைவர் தெரிவித்தார்.

