யாழ் வந்த மதபோதகருக்கு கொரோனா ! – மதபோதனையில் கலந்து கொண்டவர்களுக்கு அறிவுறுத்தல்

251 0

யாழ்.செம்மணி – இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவா்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறும், கொரோனா தொற்று தொடா்பான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் தம்மை பாிசோதனைக்குட்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளா் வைத்திய கலாநிதி த.சத்தியமூா்த்தி மற்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாள் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் ஆகியோா் இந்த கோாிக்கையினை விடுத்திருக்கின்றனா். கடந்த 15ம் திகதி சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மதபோதகா் ஒருவா் மதபோதனை நிகழ்வை நடாத்தியிருந்தாா்.

இந்த போதனை நிகழ்வை நடாத்திய போதகா் திரும்பி சுவிஸ் சென்ற நிலையில் அங்கு அவா் கொரோனா நோயாளியாக அடையாளம் காணப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப் பட்டிருக்கின்றாா். இந்நிலையில் இந்த மதபோதனையில் கலந்து கொண்டிருந்தவா்கள் தம்மை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறும், சந்தேகங்கள் இருப்பின் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் பாிசோதனைக்குட்படுத்துமாறும் கேட்டுள்ளனா்.

இதேவேளை குறித்த மதபோதகருடன் நெருக்கமாக பழகிய ஒருவா் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விடயம் அாியாலை பகுதியில் உள்ள மருத்தவா் ஒருவா் ஊடாக போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூா்த்தி மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளா் ஆ.கேதீஸ்வரன் ஆகியோாின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து உடனடியாக களத்தில் இறங்கிய அதிகாாிகள், நல்லுாா் பிரதேச மருத்துவ அதிகாாி ஜெயக்குமாா் , பிராந்திய தொற்றுநோய் தடுப்பு அதிகாாி மருத்துவா் மோகனகுமாா் மற்றும் சுகாதார பாிசோதகா், பொலிஸாா் என அதிகாாிகள் குழாம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவாின் வீட்டை சோதனைக்குட்படுத்தியிருப்பதுடன், முதல்கட்ட ஆய்வுகளையும் மேற்கொண்டிருக்கின்றனா். மேலும் குறித்த நபா் அவருடைய வீட்டிலேயே 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளாா்.

மேலும் அவருடைய குடும்பத்தாரும் கண்காணிக்கப்படவுள்ளனா்