சிறிலங்காவில் கலால் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்ட்ட சுற்றி வளைப்பில் கைப்பற்றப்பட்ட எத்தனோலை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்துவற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்வாறு கைப்பற்றப்பட்ட சுமார் 100, 000 லீற்றர் எத்தனோல் சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்படும் என நீதி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே ரத்னசிறி தெரிவித்தார்.
அத்தோடு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டள்ள குறித்த எத்தனோல்கள் நாளையதினம் உத்தியோகபூர்வமாக சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்படுமென தெரிவித்துள்ளமை குறிப்பிபடத்தக்கது.

