இத்தாலி உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு பிரவேசித்த ஆறாயிரத்துக்கும் அதிகமானவர்கள் தமது அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் வீடுகளில் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த ஐந்தாம் திகதிக்கு முன்னர் நாட்டிற்கு பிரவேசித்த 2 ஆயிரத்து 572 பேர் மற்றும் மார்ச் 5 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை உத்தியோகபூர்வமாக நாட்டிற்குள் நுழைந்த மூவாயிரத்து 460 பேர் தனிமைப்படுத்தப்பட்டு வருவதாக அந்த சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புத்தளம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டம் உள்ளிட்ட பல பகுதிகள் மற்றும் தென் மாகாணத்தின் சில பகுதிகளில் வைரஸ் தொற்றக்கூடிய அவதானம் இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தற்போது அடையாளங்கண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

