வேட்புமனு நாளை கையேட்கப்பட மாட்டாது – தேர்தல்கள் ஆணைக்குழு

401 0

தேர்தலுக்கான வேட்புமனு நாளை கையேட்கப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொது விடுமுறையாக நாளைய தினம் (திங்கட்கிழமை)அறிவிக்கப்பட்டதையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உலகை உலுக்கிவரும் கொரோனா வைரஸ் இலங்கையையிலும் கோரத்தாண்டவமாடுகிறது. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சந்தேகத்தில் இதுவரையில் 103 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் ஆயிரத்து 600 பேர் வரை தற்போது கொரோனா தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் நாட்டில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பை கருத்திற்கொண்டு அரச, தனியார் துறையினருக்கு நாளை அரச விடுமுறை தினமாக அமுல்ப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரச நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்தார்.