19 ஆவது திருத்தச்சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும் – அநுர!

398 0

19 ஆவது திருத்தச்சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பிலியந்தலை போகுந்தர பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ’19 ஆவது திருத்தத்திற்கு அமைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவருக்கும் தடையாக அமைய கூடிய சில விடயங்கள் உள்ளன.

19 ஆவது திருத்தத்திற்கு அமைய உயர் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரையான நீதிபதிகள் அரசியலமைப்பு பேரவையால் நியமிக்கப்படுவர். அது மேற்குறித்த இருவருக்கும் தடையாக அமையும்.

தற்போது ஜனாதிபதியை பணியாற்ற விடுவதில்லை ஆதலால் அவர் மஹிந்தவிடம் இருந்து அதிகாரத்தை பெற முயற்சித்ததாக சிலர் கூறுகின்றனர்.

முக்கயமாக அரசியலமைப்பு மீதான சீர்திருத்தங்களை தடை செய்ய முயற்சிக்கப்படுகின்றது. முன்னர் சட்டமா அதிபரை ஜனாதிபதியே நியமித்தார். அவ்வாறு செய்தால் அங்கு ஒரு பிணைப்பு உள்ளது.

சொன்னதை செய்ய முடியாவிடின் பதவிவிலக கோருகின்றனர். தற்போது அரசியல் அமைப்பு சபையின் அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதியால் சட்டமா அதிபரை விலக்க முடியாது.

நாடாளுமன்றத்தின் அனுமதிக்கமையவே அவ்வாறு செய்ய முடியும். சட்டமா அதிபருக்குள்ள அதிகாரங்களில் திருத்தம் மேற்கொண்டு ஜனநாயக அதிகாரமே தற்போது காணப்படுகின்றது.

ஆகவே சுயாதீன நீதி மன்ற கட்டமைப்பு தேவையேன்றால் 19 ஆவது திருத்தச்சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.