முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையிலான கட்சி சஜித் பிரேமதாச தலைமையிலான கட்சியுடன் இணைவதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.
குமார வெல்கம தலைமையிலான புதிய லங்கா சுதந்திர கட்சி, சஜித் பிரேமதாச தலைமையிலான சமகி ஜனபல வேகயுடன் இணைந்தே குறித்த உடன்படிக்கையில் கைசாத்திட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து குறித்த இரு கட்சிகளும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் இணைந்து போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆசனப்பங்கீடு உள்ளிட்ட விடயங்களில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

