59 சுயேற்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன!

261 0

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 59 சுயேற்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அதிகாரி ஒருவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

18 மாவட்டங்களில் 35 சுயாதீன குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுத்தேர்தலுக்காக மார்ச் 19ஆம் திகதி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.