ஹெரோயினுடன் இருவர் கைது

261 0
கொபேகன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுகவெல, வித்துகுளிய பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடம் இருந்து 84 கிராம் 820 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

84,500 ரூபா பெறுமதியான ஹெரோயினே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வாரியபொல பகுதியை சேர்ந்த 29 மற்றும் 33 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கொபேகன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.