நாவிதன்வெளி பிரதேச செயலாளர் அண்மைக்காலமாக அரசியல்வாதிகளை ஓரம் கட்டி செயற்படுவதாக நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் தவராசா கலையரசன் தலைமையில் நேற்று (10) இடம்பெற்றது.
இதன்போது, பிரதேசத்தில் அபிவிருத்திகளை மேற்கொள்ளும் போது பிரதேச செயலகம் ஒருதலைப்பட்சமாக செயற்படுவதாகவும், பொது விழாக்கள், மகளிர் தினம் போன்றவற்றில் பிரதேச பெண் உறுப்பினர்கள் ஓரங்கட்டப்பட்டு வருவதாக கவலை தெரிவித்தார்.
பிரதேச செயலங்களினூடாக மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் பிரதேச செயலகத்தின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டிருந்தன அவற்றை பராமரிப்பிற்காக பிரதேச சபையிற்கு ஒப்படைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது – என்றும் அவர் தெரிவித்தார்.

