யாழ் மாநகர சபை முதல்வருக்கும் இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர் மொஹமட் அஸ்ரப் ஹைதரிக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று இன்றையதினம் (11) மாநகர சபை முதல்வர் அலுவலகத்தில் இடம்பெறுற்றது.
சந்திப்பின் போது தூதுவர் அஸ்ரப் தங்களுடைய நாட்டு மக்கள் எதிர்கொண்ட 40 வருட பிரச்சினைகள், அதன் பின்னர் படிப்படியாக ஏற்பட்ட முன்னேற்றங்கள், தமது நாட்டு மக்களின் தற்போதைய முன்னேற்றம், தான் பணியாற்றிய பல்வேறு நாடுகளில் பெற்றுக் கொண்ட அனுபவங்கள் உள்ளிட்ட விடயங்களை விரிவாக சுட்டிக்காட்டியிருந்தார்.
இதன்பின்னர் முதல்வர் பதிலளிக்கையில் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளில் பல இன்னும் தீர்க்கப்படாதுள்ளமையினை சுட்டிக்காட்டினார். காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், காணி விடுவிப்பு தொடர்பில் மேற்கொள்ளப்படவேண்டிய முன்னேற்றம் குறித்தும் விளக்கினார்.

