கொரோனா வைரஸ் நாட்டுக்குள் பரவுவதை தடுப்பதற்காக அரசாங்கத்தால் நிர்மாணிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு நிலையங்கள் தொடர்பாக மக்கள் அச்சமடைய தேவையில்லையென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸை தடுப்பதற்கு அரசாங்கத்தில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வைரஸ் பரவுவதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

