பேஸ்புக் விருந்து 77 பேர் கைது

313 0

பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற பேஸ்புக் விருந்து நிகழ்வில் கலந்துகொண்ட 77 இளைஞர்,யுவதிகள்  நேற்று (8) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட 77 பேரும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை பயன்படுத்திய நிலையில் இருந்த போதே பொலிஸாரால் கைது​செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களுள் 60 இளைஞர்களும் 17 யுவதிகளும் உள்ளடங்குவதாக பன்னிப்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.