மனிதநேய ஈருருளிப்பயணமானது இன்று முருகதாசன் திடலை (ஐக்கிய நாடுகள் சபை முன்றலை ) வந்தடைந்தது.

184 0

தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டி Bruxelles Belgium ல் இருந்து புறப்பட்ட மனிதநேய ஈருருளிப்பயணமானது இன்று (08/03/2020) Lausanne மாநகரத்தில் இருந்து ஆரம்பித்து 1070 km தூரத்தை பல இயற்கை அனர்த்தங்களை கடந்து ஈகைப் பேரொளி முருகதாசன் திடலை (ஐக்கிய நாடுகள் சபை முன்றலை ) வந்தடைந்தது.

நாளை 09/03/2020 அன்று பிற்பகல் 14.30 மணிக்கு தமிழின அழிப்பிற்கு நீதி கோரி பன்னாட்டு சுயாதீன விசாரணையை வலியுறுத்தி ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் நடைபெற இருக்கும் மட்டுப்படுத்தப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் மனித நேய ஈருருளிப் பயணமும்இணையவுள்ளது.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”