புதிதாக நியமிக்கப்பட்ட பட்டதாரிகளின் கொடுப்பனவிற்காக 1.6 பில்லியன் ரூபாயை ஒதுக்கும் அரசாங்கம்!

237 0

புதிதாக நியமிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு மேலதிக கொடுப்பனவுகள் உட்பட மொத்தம் 1.6 பில்லியன் ரூபாய் சம்பளத்தை தேர்தல் முடியும் வரை அரசாங்கம் வழங்கவுள்ளது.

கடந்த திங்கட்கிழமை 40,000 பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டபோதும் பொதுத் தேர்தல் முடியும் வரை இந்த நியமனங்களை இடைநிறுத்த தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்த முடிவுக்கு இதுவே காரணம் என அறிய முடிகின்றது.

இருப்பினும் இந்த விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல, ஒவ்வொரு பட்டதாரிக்கும் ஒரு வருட பயிற்சிக்காக மாதத்திற்கு 20,000 ரூபாய் வழங்கப்படும் என கூறியிருந்தார்.

மேலும் அவர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன எனவே அவர்கள் தற்போது பயிற்சியில் இல்லை என்றாலும் அவர்களுக்கான கொடுப்பனவுகள் உரிய முறையில் கிடைக்கும் என்றும் கூறியிருந்தார்.

பொதுத் தேர்தலுக்கு மறுநாள் அதவாது ஏப்ரல் 26 ஆம் திகதி முதல் பட்டதாரிகள் உத்தியோகபூர்வமாக பணிகளில் அமர்த்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

எனவே இதற்காக, ஒரு மாதத்திற்கு 800 மில்லியன் ரூபாய் அரசாங்கத்திற்கு செலவு ஏற்படுகின்றது என்பதுடன் இது மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான மொத்த செலவு 1.2 பில்லியன் ரூபாயாக இருக்கும் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

அரசாங்கம் மேற்கொண்ட இந்த நியமனம் எதிர்வரும் பொதுத் தேர்தல்களுக்கான ஒரு அரசியல் ஊக்குவிப்பாக இருக்கக்கூடும் என்பதால் இந்த அறிவிப்பை வெளியிடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.