இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கான காப்பறுதித் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2020 அரி மக அமைப்பு, ஆசிய ஊடக மற்றும் கலாசார சங்கம், பெயார் வ்ஸ்ட் காப்பறுதி நிறுவனம் ஆகியன ஒன்றிணைந்து இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளன.
இந்நிலையில் இது குறித்த நிகழ்வு கொழும்பு மன்றக் கல்லூரியில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெற்றது.
இந்தக் காப்புறுதி முறையின் கீழ் ஊடகவியலாளர்களுக்காக வருடத்தில் 985 ரூபாய் செலுத்த வேண்டும். இதன்மூலம் ஒரு மில்லின் ரூபாய் பெறுமதியான உயிர் காப்புறுதி கிடைக்கின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவுக்கு அமைய இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக 2020 அரிமஹ அமைப்பின் தலைவர் கனிஸ்க டி சில்வா குறித்த நிகழ்வில் தெரிவித்தார்.
இதில் உரையாற்றிய ஆசிய ஊடக மற்றும் கலாசார சங்க தலைவரும் ஊடகவியலாளருமான உபுல் ஜனக ஜயசிங்க பல்வேறு தடைகளுக்கு மத்தியில் இதனை வெற்றிகொள்ள தமது சங்கத்தினால் முடிந்திருப்பதாகத் தெரிவித்தார்.
அரச தகவல் திணைக்களத்தின் ஊடகவியலாளர் அடையாள அட்டையை கொண்டுள்ளவர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியும். மேலும், 0773945325 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் தொடர்புகொண்டு இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

