முன்னேஸ்வரம் பகுதியில் ஒருவரது சடலம் மீட்பு!

250 0

சிலாபம் – முன்னேஸ்வரம் பகுதியில் ஆண் ஒருவரது சடலம் இன்று (06) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் வாகனத்தில் மோதுண்டு உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. உயிரிழந்த குறித்த நபர் சிலாபம் – அலுவத்தை பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.