சர்வதேசத்தை மாற்றும் புதிய கூட்டு ரணில் எச்சரிக்கை!

246 0

சர்வதேசத்தில் மேற்குல நாடுகளின் ஆதிக்கம் குறைவடைந்து வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் வியோன் உலக உச்சிமாநட்டில் முக்கிய உரையாற்றிய போதே முன்னாள் பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய சக்திகளினால் தற்போது சர்வதேசம் வடிவமைக்கப்பட்டு வருவதாகவும் பொருளாதார, இராணுவ மற்றும் அரசியல் துறைகளில் சீனாவின் திடீர் வளர்ச்சி இதனை பறைசாற்றி நிற்பதாகவும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த புதிய சக்திகள் ஒரு புதிய அதிகார மையத்தை உருவாக்க முயற்சிப்பதால் பல்வேறு முரண்பாடுகள் தற்போது சர்வதேசத்தில் எழுந்துள்ளதாக அவர் தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மேற்குலக நாடுகளான அமெரிக்காவும் தற்போது அரசியல் ரீதியாக பிளவடைந்துள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் பிளவடைந்துள்ளதாக ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

தற்போது சீனாவில் பரவும் கொரோனோ வைரஸினால் பொருளாதாரம் பாதிக்கப்படும் நிலையை உருவாக்கியுள்ளதாக இதன் தாக்கம் இலங்கையில் உணரப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் சீனாவினாலேயே வர்த்தகப் போரையும் கொரோனா வைரஸையும் ஒன்றாக எதிர்கொள்ளக் கூடிய வல்லமை இருக்கலாம் என ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.