பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்தினபுரி பலாங்கொடை வீதியின் எல்லேபொல பிரதேசத்தில் இரத்தினபுரி நோக்கி பயணித்த லொறி ஒன்றில் எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (05) மாலை 3.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
35 வயதுடைய உயிரிழந்த நபரின் சடலம் பலாங்கொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

