ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் தெரிவு குழு இன்று(வெள்ளிக்கிழமை) கூடவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது வேட்பாளர் தெரிவு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுமென தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தமிழ் தேசிய கூட்டமைப்பு தவிர்ந்த ஏனைய கட்சிகள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கைகோர்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சிக்கு மாற்று தலைமை ஒன்றையே மக்கள் எதிர்பார்ப்பதாகவும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

