கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இனியபாரதியின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான M.H.M.ஹம்ஸா முன்னிலையில் நேற்று(வியாழக்கிழமை) ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போதே எதிர்வரும் 19ஆம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அம்பாறை – திருக்கோவில், அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு ஆகிய பிரதேசங்களில் 2006ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரை 06 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாகவே இனியபாரதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

