உலக குளுக்கோமா தினத்தை முன்னிட்டு ஹற்றனில் விழிப்புணர்வு பேரணி

316 0

உலக குளுக்கோமா தினத்தை முன்னிட்டு ஹற்றனில் விழிப்புணர்வு பேரணியொன்று இன்று (வெள்ளிக்கிழமை) காலை நடத்தப்பட்டுள்ளது.

இலங்கை கண் வைத்திய நிபுணர்களின் அனுசரணையுடன், டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் கண் சிகிச்சை பிரிவின் ஏற்பாட்டில் ஹற்றன் நகரில் இந்த விழிப்புணர்வு பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டு, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாதைகளை ஏந்தியவண்ணம் ஹற்றன் மல்லியப்பு சந்தியிலிருந்து ஹற்றன் பேருந்து தரிப்பு நிலையம் வரை பேரணியாக சென்றனர்.

கண்களில் ஏற்படக் கூடிய ஒரு குறைபாடே குளுக்கோமா ஆகும். இதனால் பார்வை குறைபாடு ஏற்படுகிறது. இந்த நோய்க்கான அறிகுறிகளை மக்களுக்கு தெளிவுபடுத்தும் முகமாகவே இந்த விசேட விழிப்புணர்வு பேரணியை முன்னெடுத்ததாக டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் கண் சிகிச்சை பிரிவுக்கான நிபுணர் தெரிவித்தார்.