பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டத்தின் கீழ் பட்டதாரிகளுக்கு பயிற்சி வழங்குவதை தேர்தல் முடிவடையும் வரையில் இடைநிறுத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அதற்கான கடிதம் பொது நிருவாக அமைச்சின் செயலாளரிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த வேலைத்திட்டத்தின் ஊடாக தகுதி வாய்ந்த 45,585 பட்டாதாரிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கான நியமனக்கடிதம் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

