புகையிரத பயணிகள் கவனத்திற்கு புகையிரத திணைக்களம் விதித்துள்ள புதிய விதிமுறை

325 0

புகையிரதத்தில் முன் கூட்டியே ஆசனபதிவு பயணம் செய்யும் பயணிகளின் புகையிரத அனுமதி சீட்டுகள் இன்று முதல் சோதனை செய்யபடவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

புகையிரதத்தில் பயணம் செய்ய முன்கூட்டியே ஆசன பதிவு செய்பவர்களின் புகையிரத அனுமதி சீட்டில் குறித்த நபர் இலங்கை பிரஜையாக இருப்பின் அவரது தேசிய அடையாள அட்டை இலக்கமும் வெளிநாட்டு பிரஜையாக இருப்பின் கடவுச் சீட்டு இலக்கமும் குறிப்பிடபட்டிருக்கும்.

எனவே அவர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது கடவுச்சீட்டு இலக்கமும் குறித்த புகையிரத அனுமதி சீட்டுடன் ஒப்பிட்டு சரிபார்த்தபின் புகையிரத திணைக்கள விதிமுறைப்படி ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்து பயணம் செய்யலாம் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

18 வயதிற்கும் குறைந்த தேசிய அடையாள அட்டை இலக்கம் இல்லாதவர்களுக்கு பெற்றோரின் அடையாளப்படுத்தல் பத்திரம் ஏற்றுக்கொள்ளபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.