ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்களுக்கு நாட்டின் தலைமைத்துவத்தை பொதுமக்கள் பெற்றுக் கொடுக்க மாட்டார்கள் -சந்திரசேன

270 0
கட்சியின் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியாத ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்களுக்கு நாட்டின் தலைமைத்துவத்தை பொதுமக்கள் பெற்றுக் கொடுக்க மாட்டார்கள் என அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

அனுராதபுரத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் இதனை தெரிவித்தார்.

கடந்த 5 வருடக் காலப்பகுதியினுள் நல்லாட்சி அரசாங்கத்தினால் நாட்டுக்கு பாரிய தீங்கு விளைவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.