யாழ்ப்பாணம் நாகர்கோவில் கடற்பகுதியில் 281 கிலோ கேரள கஞ்சா போதைப்பொருள் மீண்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
வடமராட்சி நாகர்கோவில் கடற்பரப்பில் கடற்படையினர் நேற்று முன்தினம் சுற்றிவளைப்பில் ஈடுபட்டபோது சந்தேகத்துக்கிடமான முறையில் பொருட்கள் மிதந்தன இதனை அவதானித்த கடற்படையினர் சோதனையிட்டபோது அதிலிருந்து 281 கிலோ கேரள கஞ்சாவினை மீட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட போதைப்பொருட்கள் காங்கேசன்துறை பொலிஸாரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மதுவரி திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

