புதிய வரவு செலவுத் திட்டம் ஊடாக கிடைக்க பெறும் சலுகைகள்

289 0

budgetயாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட கரையோர மாவட்ட மக்களின் ஜீவனோபாய விருத்திக்கு 1200 மில்லியன் ஒதுக்கீடு   ஒரு இலட்சத்து 50 ஆயிரம் உயர்தரப் மாணவர்களுக்கு 28 ஆயிரம் உயர்தர கல்வியை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மடிக் கணனி வழங்கப்படும்.

1 கிலோ கோழி இறைச்சியின் அதிகூடிய விற்பனை விலை 420 ரூபாவாக நிர்ணயம்

பாடசாலை தளபாடங்களுக்காக 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

மொரகாகந்தை, உமா ஓயா திட்டங்களுக்கு 60045 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

20,000 ஏக்கர் காணிகளை அபிவிருத்தி செய்ய, முதலீட்டாளர்களுக்கு 350 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

கல்விக்காக 80 மில்லியன் ரூபா ஒதுக்கல்

மன்னாரில் உள்ள தாரக்குளம் புனரமைக்கப்படும்

கொக்கோ, கோப்பி, மிளகு வெற்றிலை உற்பத்திகளுக்கு ஊக்குவிப்பு தொகை வழங்கப்படும்.

மீன்பிடி கைத்தொழிலுக்காக உட்கட்டமைப்பு, நங்கூர வசதிகளுக்காக 1350 மில்லியன் ரூபா

கோழி பண்ணையாளர்களுக்கு 15 ஆயிரம் குளிரூட்டி சாதனங்கள் வழங்கப்படும்

மீன் பிடித் துறையில் 163 பில்லியன் இலாபம் கிடைத்துள்ளது. இதனை ஐந்து மடங்களால் அதிகரிக்க நடவடிக்கை  ஏற்றுமதி சந்தைகளில் இடம்பிடிக்க பழங்களை பயிரிடுவதற்காக 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு

வடக்கு , கிழக்கு வீடமைப்பு திட்டத்திற்காக ரூபாய் 5 ஆயிரம் மில்லியன் ஒதுக்கீடு

பெருந்தோட்டத்துறை தோட்டத் தொழிலாளர்களுக்காக 25 ஆயிரம் வீடுகள் அமைக்க நடவடிக்கை

குறைந்த மற்றும் நடுத்தர குடும்பங்களுக்காக 5 இலட்சம் வீடுகள்

2017ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் புதிய உள்நாட்டு விமான சேவை  பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளை ஒழுங்கு படுத்த நடவடிக்கை

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் வாகன உரிமையாளர்கள், 32 இருக்கைகளை கொண்ட பேரூந்துகளை 75% வட்டிச் சலுகையின் அடிப்படையில் பெற்றுக்கொள்ள 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு. முச்சக்கர வண்டிக்கு பதிலாக சிறிய ரக சிற்றூர்திகள் …. வங்கிகளின் ஊடாக கடன் வசதி..

துறைமுகத்தில் 12 மணித்தியாலங்கள் நங்கூரமிட இலவசம் பதுளை, எல்ல, பண்டாரவளை ஆகிய பிரதேசங்கள் சுற்றுலா வலையமாக அபிவிருத்தி செய்யப்படும்

இலங்கையை ஆசியாவின் கேந்திர மத்திய நிலையமாக்குவதற்கு எதிா்ப்பாா்ப்பு அரச வியாபாரங்களை அபிவிருத்திச் செய்வதற்கு 100 மில்லியன் ரூபாய்.. வர்த்தகத்துறைக்கு 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

பெருநகரங்களுக்காக 750 மில்லியன் ரூபாய் நேரடி முதலீடு – நிதியமைச்சினால் இலங்கையின் பெயரை பிரசித்தபடுத்த 100 மில்லியன் ரூபாய் ஆடைத் தொழிற்துறைக்கு வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுக்கொள்ள விசேட நடவடிக்கை

முறையான முதலீட்டாளர்களுக்கு 5 வருடங்களுக்கான விசா பெற்றுக்கொடுக்கப்படும். இலங்கையின் உற்பத்திகளுக்கும் தேவைகளுக்கும் பன்முகத்தன்மை அவசியம்..

மட்பாண்டம் மற்றும் களிமண் உற்பத்திகளுக்காக களிமண்ணை பெற்றுக்கொடுப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தீர்ப்பது தொடர்பாக ஜனாதிபதியின் ஆலோசனையின் படி அதற்கு விருப்பமான அனைத்து தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படு உப்பு தொழிற்துறை , அரச மற்றும் தனியார் பிரிவுகளுக்காக திறக்கப்படும்.

ஓடு மற்றும் பீங்கான் தொழிற்துறைக்கு நிவாரண உதவி கொழும்பு நகரில் கைவினைப் பொருட்கள் விற்பனை மத்தியநிலையமொன்றை அமைக்க நடவடிக்கை. ஆடை , கைத்தறி தொழிலின் அபிவிருத்திக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக்கொடுக்க பரிந்துரைஅதற்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு..

வேலைவாய்ப்பினை 50 தொடக்கம் 300 வரை பெற்றுக்கொடுத்துள்ள வியாபாரிகளுக்கு 25 வீத சலுகை கடன் திட்டம் தனியார் துறையினருக்கு வாரத்திற்கு ஐந்து நாள் வேலை… (45 மணி நேர வேலை) சிறிய மற்றும் நடுத்தர கடன் உத்தரவாத திட்டத்திற்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு அரச மருத்துவமனைகளில் தங்கியிருந்து சிகிச்சைப்பெறும் அனைத்து நோயாளர்களுக்கும் , மருத்துவமனையை விட்டுச் செல்லும் போது அவர்களுக்கான செலவீனம் குறிப்பிடப்பட்ட கையேடு ஒன்றினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

. வியாபாரங்களை மேற்கொள்வதற்கான வசதிகளை ஊக்குவிக்க நடவடிக்கை அனைத்து மருந்தகங்களும் பதிவு செய்யப்படுதல் வேண்டும். இல்லையேல் ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் மருத்துவமனையின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த, 25 ஆயிரம் மில்லியன் தொழில் பயிற்சித் துறைக்கு புலமைப்பரிசில் முறையொன்று தாதியர் பயிற்சி கல்லூரிகளின் அபிவிருத்திக்காக 200 மில்லியன். பாடசாலை மாணவர்களுக்கு 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான காப்புறுதி கிராமப்புற பகுதிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய புதிய நடவடிக்கை ல்கலைக்கழக விரிவுரை நேரம் இரவு 8 மணி வரை நீடிப்பு. பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி சாரா நடவடிக்கைகளுக்காக 100 மில்லியன் கராப்பிடிய மருத்துவமனையில் பத்து மாடி கட்டிடமொன்றை நிர்மாணிக்க 500 மில்லியன் 2020ம் ஆண்டளவில் பல்கலைக்கழகங்களில் உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரம் வரை அதிகரிக்கப்படும். விசேட தேவையுடைய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை அதிகரிக்க விசேட வேலைத்திட்டம். 2017ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதியில் இருந்து அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் சேமிப்பு கணக்கொன்றை திறப்பதற்கு வணிக வங்கிகளின் இணக்கம் மேலதிக விபரங்களுக்காக எமது இணையத்தளத்துடன் இணைந்துருங்கள்.