யோஷித ராஜபக்ஷ பொதுத்தேர்தலில் களமிறங்குவது தொடர்பாக பொதுஜன பெரமுன கருத்து

312 0

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வர் யோஷித ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத்தேர்தலில் களமிறங்க போவதாக இணைய தளங்களில் தகவல்கள் வைரலாகி வருகின்றன.

அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் அவர் களமிறங்க உள்ளதாகவும்  கூறப்படுகின்றது.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக  ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வட்டாரத்தகவல்கள், அவ்வாறான எந்தவொரு  முன்னேற்பாடும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றன.

இதற்கிடையே யோஷித ராஜபக்ஷ கடற்படை சேவையில் இருந்து விலகுவதாக கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லையென கூறப்படுகின்றது.